ரஷ்யாவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம்.. அயல் நாட்டில் அதிகரிக்கும் அஜித்தின் மவுசு !!!!
இந்த நிலையில், ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை விஸ்வாசம் படத்திற்கு கிடைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸ் சார்பில் பிரசாந்த் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த இரு நாடுகளிலும் ரிலீசாகும் முதல் அஜித் படம் விஸ்வாசம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த நிறுவனம் ரஜினியின் 2.0 படத்தை ரஷ்யாவில் ரிலீஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.இமான் இசையில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக், கோவை சரளா, அனிகா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Comments
Post a Comment