8 மாதத்தில் இல்லாத வீழ்ச்சி !!!. பெட்ரோல், டீசல் விலை எவ்ளோ தெரியுமா ???
பெட்ரோல், டீசல் விலை இந்த ஆண்டில் மிகக்குறைவான விலையை இன்று எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள் தோறும் மாற்றி அமைத்து அறிவித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் அதிகபட்சமாக லிட்டர் ரூ.86.10 காசுகளாகவும், டீசல் ரூ.80க்கும் அதிகரித்தது.
அதன்பின் மக்களின் சிரமத்தைக் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்து அறிவித்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகச் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்தது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 54 டாலர்களாக நேற்று அதிகரித்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
இன்று பெட்ரோல் பெட்ரோல், டீசல் விலை இந்த ஆண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மிகக்குறைந்த விலையை பெட்ரோலும், கடந்த 8 மாதங்களில் இல்லாத குறைந்த விலையை டீசலும் எட்டியுள்ளன.
பெட்ரோலில் நேற்றைய விலையைக் காட்டிலும் 5 காசுகளும், டீசலில் 7 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் பெட்ரோல் ஒருலிட்டர் ரூ.73.26 பைசாவாகவும், டீசல் ஒரு லிட்டர் 67.31 பைசாவாகவும் விற்கப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.69.74 பைசாவாகவும், டீசல் ரூ.63.76 பைசாவாகவும் விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.75.36, டீசல் 66.72 பைசாவாகவும் விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.71.84, டீசல் 65.51 பைசாவாகவும் விற்பனையாகிறது.
Comments
Post a Comment