"சென்சார்" முடிந்தது !!! இனி அலப்பற ஆரம்பம் !!!

அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. தொடர்ந்து நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து தம்பி ராமையா, போஸ் வெங்கட், ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. ‘தூக்கு துரை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி, அஜித் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கிறது ‘விஸ்வாசம்’. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை, நயன்தாராவின் ‘அறம்’ படத்தைத் தயாரித்த கே.ஆர்.ஜே. ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. அத்துடன், ஏரியா வாரியாக யார் யார் விநியோக உரிமையைப் பெற்றுள்ளனர் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

‘விஸ்வாசம்’ படத்துடன், ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படமும் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.


Comments

Popular posts from this blog

உலக சாதனையை நோக்கி விஸ்வாசம் ட்ரெய்லர் !!! வெறித்தனமாக காத்திருக்கும் தல ரசிகர்கள் !!!

மே - 01 - இல் "பிங்க்" படம் ரிலீஸ் உறுதி !!! இது தான் போனிகபூரின் நீண்ட நாள் ஆசை...

வீடியோ இணைப்பு :- நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது ! தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!