இணையத்தை கலக்கும் "கண்ணான கண்ணே" பாடல்.. அஜித் படத்திற்கு வேரலெவல் "ப்ரமோஷன்" !!!



விஸ்வாசம் திரைப்படத்தின் 'கண்ணான கண்ணே' பாடலின் #KannaanaKanney  ஸ்பெஷல் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பலரும் அந்த ஹேஸ்டெக்கை பயன்படுத்தி தங்கள் செல்ல குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

அஜீத்குமார், நயன்தாரா, சத்யராஜ், ஜெகபதிபாபு, பிரபு, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்துள்ள படம், ’விஸ்வாசம்’. டி.இமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவா இயக்கியுள்ளார். வரும் பொங்கலுக்கு இந்தப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சமீபத்தில் பாடல்கள் வெளியானது. எல்லா பாடல்களும் ஹிட் அடித்துள்ள நிலையில் பாடலாசிரியர் தாமரை வரிகளில் சித் ஸ்ரீராம் பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் அதிகம் கவனம் பெற்றது. அந்த வரிகளை லயித்து பலரும் அந்த பாடலை பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் அப்பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியானது. லிரிக்கல் வீடியோவில் அஜித்தும் நயன்தாராவும் கணவன் மனைவியாக ஒரு பெண் குழந்தையுடன் புகைப்படங்களே நேற்று முதல் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக கிராமத்து பின்னணியில் அன்பைக் கொட்டும் தகப்பனாக வரும் அஜித், தனது மகளை கொஞ்சும் புகைப்படங்கள் கிட்டத்தட்ட பலரின் டிபி புகைப்படங்களாக மாறியுள்ளன.



சால்ட் அன் பெப்பர் இல்லாத இளமையான அஜித், கிராமத்து நயன்தாரா, அழகிய மழலை, தாமரையின் வரிகள், சித் ஸ்ரீராமின் குரல் என 'கண்ணான கண்ணே' படல் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

இந்நிலையில் அந்தப்பாடலின் வரிகள் குழந்தை மீதான அன்பை பறைசாற்றும் விதமாக உள்ளதால் சமூக வலைதளங்களில் #KannaanaKanney என்ற சிறப்பு ஹேஸ்டேக்கில் அவரவர்களின் செல்ல குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் இன்று காலை முதல் ட்விட்டர் வலைதளம் குழந்தைகளின் முகங்களால் நிரம்பி வழிகிறது.


Comments

Popular posts from this blog

வீடியோ இணைப்பு :- நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது ! தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!

யார் இந்த அஜித் ??? இவரை ரசிக்க இந்த காரணங்கள் போதும் !!!

உலக சாதனையை நோக்கி விஸ்வாசம் ட்ரெய்லர் !!! வெறித்தனமாக காத்திருக்கும் தல ரசிகர்கள் !!!