மே - 01 - இல் "பிங்க்" படம் ரிலீஸ் உறுதி !!! இது தான் போனிகபூரின் நீண்ட நாள் ஆசை...



 விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் பிங்க் ரீமேக்கை அஜித்துக்கு தேர்வு செய்தது குறித்து போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் போனிகபூர் கலந்து கொண்டு பேசும்போது, அஜித்குமாருக்காக ‘பிங்க்’ படத்தை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-



“இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்று ஸ்ரீதேவியும் அந்த எண்ணத்தை ஏற்றுக் கொண்டார்.

தமிழ் படம் தயாரிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். ‘பிங்க்’ படத்தை தமிழில் எடுப்பதிலும், அஜித்துடன் இணைந்து பணிபுரிவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் மே மாதம் 1-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம். அஜித் பிறந்தநாளன்று அவரது திரைப்படம் வெளியானது  கடைசியாக "ஜனா" தான். எனவே மீண்டும் அவரது பிறந்தநாளன்று அவருடைய படம் வெளியாக வேண்டும் என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.. அவர்களோடு சேர்ந்து நானும் அதை எதிர்பார்க்கிறேன்.. இதுவே என் நீண்ட நாள் ஆசையும் கூட..

Comments

Popular posts from this blog

உலக சாதனையை நோக்கி விஸ்வாசம் ட்ரெய்லர் !!! வெறித்தனமாக காத்திருக்கும் தல ரசிகர்கள் !!!

வீடியோ இணைப்பு :- நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது ! தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!