அஜித்துக்காக எழுதப்பட்ட மரண மாஸான பாடல் வரிகள்.. வாய்ப்பு கிடைக்காததால் கவலை !!!



விஸ்வாசம் படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.. கிடைத்திருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பேன்...

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த  திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. விஸ்வாசம் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது,அனைத்து பாடல்களுக்கும் டி இமான் இசையமைத்திருகிறார், ரசிகர்கள் இந்தப் பாடலுக்காகத்தான் நீண்டகாலம் காத்திருந்தார்கள்.




இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் நான் படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலை எழுதிய கவிஞர் அஸ்மின் விஸ்வாசம் படத்திற்கு நான் பாடலை எழுதி இருந்தால் இதை தான் எழுதி இருப்பேன் என ஒரு பாடலுக்கான வரிகளை வெளியிட்டுள்ளார் இந்த வரிகள் அனைத்தும் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இதோ அந்த வரிகள் 👇👇👇



தூக்குத்தொற பேரக்கேட்ட
வாயப்பொத்தும் நெருப்பு
தூக்கிவச்சி கொஞ்ச சொல்லும்
எங்க தல சிரிப்பு
வேட்டிகட்டி அவர் நடந்தா
வேட்டிக்கெல்லாம் மதிப்பு – நான்
பாட்டில் வச்சி பாடப்போறன்
பாண்டியரின் சிறப்பு
சரணம்-1

பட்டாக்கத்தி பளபளக்க
பட்டிதொட்டி பரபரக்க
எட்டுவச்சு வச்சு வர்ரார் பாரு
எதிரி ஆகப்போறான் சுக்கு நூறு.
கெட்டதெல்லாம் கருவறுக்க
தொட்டதெல்லாம் தூள்பறக்க..
முட்டி முட்டி மொளச்சாரு
தல வாழ்ந்து வரும் வரலாறு
சோழமன்னன் வந்து
மதுரயில பொறந்தான்
சோகம் ஓடிருச்சு
எமக்கிவன் வரந்தான்
ஏழமக்களுக்கு
அள்ளி அள்ளி கொடுத்தான்
எம்ஜிஆரு போல
பேரு இவன் எடுப்பான்
தன்னாலே வந்து இவன் தலையெடுத்தான்
ஒரு கண்ணாலே எதிரிகளின்
கத முடிப்பான்-வானம்
அண்ணாந்து பார்க்கும் இவன்
பூ மொகத்த..
பூமி கொண்டாடித்தீர்க்கும்
இவன் தைரியத்த.
பலபேர் இருந்தாலும்
தல கொஞ்சம் வித்தியாசம்
அதனால் எல்லோரும்
இவன் மேலே விஸ்வாசம்
ஒருநாள் தமிழ்நாடு
இவன் பின்னே உருவாகும்
தலயின் பெயர் சொல்லி
வெளிநாடும் கொண்டாடும்.
தலை மகன் பிறந்தான்
தமிழ் வழி நடந்தான்
எங்கள் உயிரிலும் மனதிலும்
அவன் அமர்ந்தான்..

Comments

  1. என் தலைவருக்கு என்றே எழுதிய பாடல் சூப்பர்

    ReplyDelete
  2. என் தலைவருக்கு என்றே எழுதிய பாடல் சூப்பர்

    ReplyDelete
  3. வரிகள் அனைத்தும் என் தல யின் முகத்தையும் அவர் குணத்தையும் என் கண்முன்னே காணச்செய்கிறது. சிறப்பு. மிகச்சிறப்பு....

    ReplyDelete
  4. தலயின் சிறப்பு நீங்கள் எழுதிய வரிகள் அனைத்தும் உண்மை

    ReplyDelete
  5. தலைக்கு ஏத்த பாடல் தான் இது மிகவும் அருமை

    ReplyDelete
  6. அருமையான வரிகள்

    ReplyDelete
  7. அருமையான வரிகள்

    ReplyDelete
  8. மரண மாஸ் ஆ இருக்கு

    ReplyDelete
  9. அருமை அண்ணா வாழ்த்துக்கள் ரொம்ப சூப்பரா இருக்கு எங்க தல கு னு எவ்ளோ அழகா எழுத்திருக்கிங்க மிக்க மகிழ்ச்சி அண்ணா. .... கண்டிப்பா இந்த பாடலை எப்படியாவது ஒரு திரைப்படத்திலாவது பாட வேண்டும் இது எங்கள் அன்பான வேண்டுகோள்

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர்களுக்கு இந்த பாடல் இசையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
      அன்புடன்
      கவிஞர் அஸ்மின்
      0094771600795
      https://www.youtube.com/watch?v=KXzjV6nlmAk

      Delete
  10. அன்பு நண்பர்களுக்கு இந்த பாடல் இசையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
    அன்புடன்
    கவிஞர் அஸ்மின்
    0094771600795
    https://www.youtube.com/watch?v=KXzjV6nlmAk

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உலக சாதனையை நோக்கி விஸ்வாசம் ட்ரெய்லர் !!! வெறித்தனமாக காத்திருக்கும் தல ரசிகர்கள் !!!

மே - 01 - இல் "பிங்க்" படம் ரிலீஸ் உறுதி !!! இது தான் போனிகபூரின் நீண்ட நாள் ஆசை...

வீடியோ இணைப்பு :- நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது ! தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!