ரசிகர் மன்றங்கள் இல்லை ! கட்சிக் கொடி இல்லை !! மன்றமே இல்லாமல் மாஸ் காட்டும் அஜித் !!!

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்க ரிலீசாக உள்ள நிலையில் நேற்று டிசம்பர் 30, 2018 அன்று மதியம் 1.30 மணியளவில் அப்படத்தின் டிரெய்லரை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ப்லிம்ஸ் YouTube - இல் வெளியிட்டது... மேலும் இந்த டிரைலர், இதுவரை எந்த தென் இந்திய சினிமாவும் செய்யாத புது வரலாறு படைத்துள்ளது. சுமார் 10 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற, முதல் தென்னிந்திய திரைப்படம் இது தான். சமூக வலை தளங்களில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது. 'பேட்ட' படத்தின் டிரைலரின் ஒரு நாள் சாதனையை, 9 மணி நேரத்தில் 'விஸ்வாசம்' முறியடித்துள்ளது. மேலும் நேற்று சென்னை ரோகினி திரையரங்கு வளாகத்தில் LED திரையில் விஸ்வாசம் ட்ரைலர் திரையிடப்பட்டது.. இதற்காக சென்னை முழுவதுமுள்ள அஜித் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் தியேட்டர் வாசல் முன்பு திரண்டனர்.. ரசிகர் மன்றம் இல்லாத ஒர் நடிகருக்கு இந்த அளவு கூட்டம் கூடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. வீடியோவைக் காண 👇 https://youtu.be/HwqAjCEKbhg