யார் இந்த அஜித் ??? இவரை ரசிக்க இந்த காரணங்கள் போதும் !!!

எல்லோரையும் உற்றுநோக்கும் இவ்வுலகில் நடிகர்கள் மீதான மக்களின் கண்ணோட்டத்தை நன்கு அறிந்தவர்.. தன்னை சுற்றி 100 பேர் இருந்தாலே அந்த பலத்தை அரசியலில் காட்டி ஆதாயம் தேடுவோர் பலர் இருக்கும் பட்சத்தில் பல கோடி ரசிகர்களை கொண்ட இவர் ஒருபோதும் அவர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை.. தன் மீதும் தன் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அன்று பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்களை கலைத்தவர். என் வேலை சினிமாவில் நடிப்பது மட்டுமே என்று அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கையில் தன் ரசிகர்களை வழி நடத்தி வருகிறார் (அரசியல் தெரியாமல் இல்லை, அரசியல் விரும்பாமை). தன் கலைத் திறமையால் சேர்ந்த இந்த கூட்டத்தின் அன்பை அரசியலில் அடகு வைத்து ஆளத் துடிக்காத எண்ணம்❤ படிப்பு, வேலை மற்றும் உங்கள் பெற்றோர்களை கவனிப்பதே நீங்கள் எனக்கு தரும் மிகப் பெரிய மரியாதை, அன்பு. திரைப்படங்களை பொழுதுபோக்காக பாருங்கள், ரசியுங்கள் தவறில்லை. ஆனால் யாரையும் கண் மூடித்தனமாக நம்பாதீர்கள் என்று கூறியவர். நாகரீகம் தெரிந்த நல்ல மனிதர் #தல #அஜித் ❤🙏 Written B...